சம்மாந்துறை அன்சார்.
அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்கு COVID-19 கண்டறியப்பட்டிருந்த நிலையில் அவர்களோடு நெருங்கிய தொடர்பினை பேணிய விமல் வீரவன்ச 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் நெருக்கமானவராக தான் அடையாளம் காணப்பட்டுள்ளதால், தன்னை சுயமாக தனிமைப்படுத்துவது எனது பொறுப்பு," என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் வீரவன்ஸா மேலும் கூறுகையில், தொழில்துறை அமைச்சகத்தில் உள்ள அவரது அலுவலகமும் 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என்றும் அங்கு கிருமி நீக்க வேலைகள் இடம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சின் நடவடிக்கைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk