Ads Area

சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்ட ஜீப் (Jeep) தொடர்பில் விளக்கமளித்துள்ள பொலிஸ் தலைமையகம்.


"Polish Rambukkana" ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொலிஸ் ஜீப்பைப் போன்ற ஒரு வாகனத்தின் படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது இது கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்றோடு தொடர்புபட்டு வந்த புகைப்படமாகும் என இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைப் பொலிஸ் தலைமையகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் நீல நிற பொலிஸ் ஜீப்பைப் போன்ற டாடா சுமோ வாகனம் ஒன்றில்  "Polish Rambukkana" ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தின் உரிமையாளர் அதனை பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டிருந்தார் அதனோடு தொடர்பான புகைப்படங்களே தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது குறித்த வாகனமானது இலங்கைப் பொலிசுக்கு சொந்தமான வாகனம் அல்ல மேலும் இந்த வாகனம் ரம்புக்கனா பொலிஸ் நிலையத்திற்கும் சொந்தமானது அல்ல என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

வாரியபோலா பகுதியில் கார் விற்பனை நிலையம் ஒன்றி உரிமையாளர் ஒருவரே தனது வாகனத்தை பொலிஸ் வாகனம் போன்று மாற்றியமைத்து, அதை பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றுள்ளார். ரம்புக்கனா பொலிஸார் சந்தேக நபரை அவரது வாகனத்துடன் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வாரியபொல பகுதியில் வைத்து கைது செய்து வாரியபோலா காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏப்ரல் 11 ஆம் தேதி வாரியபோலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டு பின்னர் பின்னர் விணையில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிவந்த வாகனத்தின் படங்கள் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திலிருந்து வந்தவை என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்து ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe