Ads Area

துபாயில் மதநல்லிணக்கத்தின் வெளிப்பாடு.. இறந்த தமிழ்ப் பெண்மணிக்கு இறுதிச் சடங்கை மேற்கொண்ட முஸ்லிம் இளைஞர்கள்..!!

தமிழகத்தில் இருந்து துபாய்க்கு விசிட்டில் வந்த பெண்மணி ஒருவர் அமீரகத்திலேயே உயிரிழந்ததை அடுத்து அவருக்கு இறுதிச்சடங்கிற்கு முஸ்லிம் இளைஞர்கள் உதவிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

துபாய்க்கு விசிட் விசாவில் வந்த தமிழகத்தைச் சேர்ந்த மரியா ஜார்ஜ் எனும் 62 வயதான கிறிஸ்தவப் பெண்மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய்களின் போது ஏற்பட்டுள்ள விமானப் பயணத்தடை காரணத்தினால் மரியாவின் மகள் அமீரகத்திலேயே இறுதிச்சடங்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அவரது மகள் அமீரக குடியிருப்பாளராக இல்லாத தனது தாயாரின் இறுதிச்சடங்கை அமீரகத்திலேயே மேற்கொள்ள பல அலுவலகங்களையும் மனிதர்களையும் அணுகியுள்ளார்.

பொதுவாக, விசிட்டில் அமீரகம் வந்து இறப்பவல்களின் உடலை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதே வழக்கமாகும்.

இறுதியில் அவர் ஒரு நலன்புரி குழுவான மார்கஸின் துபாய் அலுவலகத்தை நாடியுள்ளார்.

அவரது நிலையை உணர்ந்த மார்கஸ் துபாய், மரியா ஜார்ஜுக்கு அமீரகத்திலேயே இறுதி சடங்கு மற்றும் அடக்கம் செய்வதற்கான பொறுப்பை ஏற்க முடிவு செய்துள்ளது.

மார்கஸின் ICF (இந்திய கலாச்சார மன்றம்) நலக் குழுவின் உதவியுடன், மகளுக்கு தனது தாயின் இறுதி சடங்குகள் அமீரகத்தில் நடைபெறுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மரியா ஜார்ஜ் உடலானது மார்கஸ் ICF நலக் குழுவின் உதவியுடன் வெள்ளிக்கிழமை ஜெபெல் அலியில் இருக்கும் ஒரு சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

மார்க்கஸ் குழுவில் இருக்கும் தன்னார்வலர்களான சஜித் அஸ்லாமி, நஜீர் சோக்லி, சனீர் வர்கலா, ஷம்சிர் சோக்லி ஆகியோர் இந்த சேவைக்கு தலைமை தாங்கினர்.

இறந்த மரியா குடும்பத்தின் உறுப்பினர்கள் மார்கஸ் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் தேவாலயத்தின் தந்தை மைக்கேல் கார்டோஸ் ICF தன்னார்வலர்களின் உதவிக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தகவலுக்கு நன்றி - https://www.khaleejtamil.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe