Ads Area

சம்மாந்துறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!களத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

சம்மாந்துரை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை எல்லைகுட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய  சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று காலை 8.00 மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது. சம்மாந்துறையில் ஆதார வைத்தியசாலை ,  அப்துல் மஜீட் மண்டபம், அல் மர்ஜான் பாடசாலை போன்ற மூன்று இடங்களில் 

அரச அதிகாரிகள், மக்களுடன் நேரடி தொடர்பை கொண்டிருப்போர், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள்,60 வயதுக்கு மேற்பட்டோர், கற்பிணி தாய்மார்,  என பலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணி சிறப்பாக சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

மக்கள் உற்சாகத்துடன் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வருவதை காணக்கூடியதாக இருந்தது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம் தெளபீக் சம்மாந்துறையில் கொரோனா தடுப்பூசி

செலுத்தும் இடங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe