Ads Area

இணைய கல்விக்காக ஆபத்தான உயரத்தை நாடும் இலங்கை மாணவர்கள்.

 அல்ஜசீரா

இணைய வழி கற்கையில் இணைந்து கொள்வதற்காக இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் அடர்த்தியான புதர்கள் ஊடாக சிலவேளைகளில் சிறுத்தைகள், யானைகளைக் கடந்து மூன்று கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

பொகிட்டிவாயவைச் சேர்ந்த ஆசிரியையும் 45 மாணவர்களும் இணைய சிக்னலைப் பெறுவதற்காக உயரமான பாறையொன்றின் மீது ஏறுகின்றனர்.

கொவிட் காரணமாக பாடசாலைகளுக்கு செல்ல முடியாத தனது மாணவர்களிற்கான பாடங்களை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்ப ஆசிரியை நிமாலி அனுருதிக அந்த சிக்னல்களைப் பயன்படுத்துகின்றார்.

அந்தக் கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும்  ஆசிரியரின் இணையப் பாடங்களை பெற்றுக்கொள்வதற்காக அந்த ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

அவர்கள் அனைவரிடமும் கையடக்கத் தொலைபேசியோ அல்லது மடிக்கணினியோ இல்லை.

நான்கு ஐந்து சிறுவர்கள் ஒரே கையடக்கத் தொலைபேசியை அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்களின் பெற்றோர்கள் அனேகமாக விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் - அவர்களும் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உயரமான பாறைகளை நோக்கிச் செல்கின்றனர்.

தனது ஆறாம் வகுப்பு மகனுடன் செல்லும் எச்.எம். பத்மினிகுமாரி சிறுவர்கள் நாளொன்றிற்கு இரண்டு தரம் உயரமான மரங்களில் ஏறுகின்றனர். இது தங்களுக்கு  அச்சத்தை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கிராமம் அடிப்படை வசதிகள் அற்றதாக காணப்படுகின்றது,அந்தக் கிராமத்தின் பிள்ளைகள் 16 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கின்றனர். அந்தப் பாடசாலை தற்போது மூடப்பட்டுள்ளது.

லுனுகலவில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடர்ந்த காட்டில் உள்ள  மர உச்சிக்கு அழைத்துச் செல்கின்றனர்.அந்த மரம் 30 அடி உயரமானதாக காணப்படுகின்றது,அதிலிருந்தாலே இணைய வசதிகளைப் பெற முடியும். அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் பாடங்களை பதிவேற்றிக் கொள்கின்றனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe