(நூருல் ஹுதா உமர்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து இடம் மாற்றலாகி வந்து இன்று கடமையேற்றிருக்கும் அஸாத் எம் ஹனிபா அவர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்றினை அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் இன்று (15) மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பின் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, வைத்தியர் முபாரிஸ் மற்றும் மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.பீ.ஸலீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.