Ads Area

செல்லுபடியாகும் விசா கைவசம் உள்ள வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே குவைத்திற்குல் நுழைய அனுமதி.

குவைத்தில் ஆகஸ்ட்-1,2021 முதல் வெளிநாட்டவர்களில் செல்லுபடியாகும் விசா கைவசம் (Validity Work Permit) உள்ளவர்கள் மட்டுமே சுகாதரத்துறை அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடித்து நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்பதை உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய நுழைவு விசா(Enter Visa) கொண்ட வெளிநாட்டவர்கள் அல்லது குவைத்தில் இருந்து தாயகம் சென்று விசா காலாவதியானவர்கள் குவைத்துக்குள் நுழைய முடியாது என்பதை இந்த புதிய அறிவிப்பு உறுதி செய்துள்ளது. அதுபோல் குவைத்துக்கு வருகைதர விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு விசிட் விசா வழங்க கொரோனா அவசரக் குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. 

அதுபோல் வருகின்ற ஆகஸ்ட்-1,2021 முதல் வெளிநாட்டவர்கள் குவைத்தில் நுழைவதற்கு அனுமதிக்கும் அமைச்சரவையின் முடிவில் செல்லுபடியாகும் விசா கைவசம் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெளிவாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் இவர்கள் குவைத் சுகாதாரதுறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்திருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான நிபந்தனை ஆகும். தற்போது குவைத் திரும்ப முடியாமல் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 400,000 ஐ தாண்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சிலருக்கு மட்டுமே குவைத் ஒப்புதல் அளித்த இரண்டு டோஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளது. 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe