தொண்டாமுத்தூர்: தமிழ்நாடு.
கோவை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (27), மருந்துக்கடை விற்பனையாளர். இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு சுமதி (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய அவர் நள்ளிரவு வரை மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், தனியாக படுக்கைக்கு சென்றார். நேற்று காலை மனைவி எழுந்து பார்த்தபோது படுக்கை அறையில் ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த பேரூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுக்கை அறையில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், தனக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகியும் தாம்பத்ய உறவிற்கு மனைவி மறுப்பு தெரிவித்து வருவதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.