Ads Area

கத்தாரில் விசைப் படகு விபத்தில் இந்தியர் மரணம், உடல் தாயகம் அனுப்பி வைப்பு!

ஜூலை 26.

கத்தாரில் இறந்த மீனவரின் உடலை தாயகத்தில் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த ஒருங்கிணைந்த தமிழர் பேரவை - கத்தார்.     

ஒரு வார கடுமையான போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி. விசைப்படகு விபத்தில் மரணம் அடைந்த மீனவ சகோதரரின் உடலை தாயகத்திற்கு அனுப்பிவைக்கும் பணியில் தொடர்ந்து ஒரு வார போராட்டத்தில் வெற்றி பெற்று  (25.07.2021) திரு. சசிக்குமார் அவர்கள் உடல் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பெரியகுப்பதை சேர்ந்த மீனவ சகோதரர் திரு. சசிக்குமார் அவர்கள் கடந்த 09.07.2021 அன்று கத்தாரில் நடந்த விசைப்படகு விபத்தில்  இறந்துவிட்டார். அன்னாரின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மீனவ பிரதிநிதி சகோதரர் திரு. ராபர்ட் அவர்கள் 17.07.2021 அன்று  இந்திய தூதகரத்தில் (India in Qatar (Embassy of India, Doha)  கீழ் செயல்படும் ICBF (Indian Community Benevolent Forum - Qatar) அமைப்பின் அசோசியேட் அமைப்பான  கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் தாயகத்திற்கு அனுப்பும் பணியில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் நிர்வாகிகள் துணை செயலாளர் திரு. கதிர் அகமது, செயலாளர் திரு. வலியுல்லாஹ்,தலைவர் திரு. சமீர் அகமது, துணை தலைவர் திரு. இப்ராஹிம், பொருளாளர் திரு. சிவராமன் , துணை செயலாளர் திரு. விஜயக்குமார், நன்கொடை ஒருங்கிணைப்பாளர் திரு.ஜாபர் சாதிக் ஆகியோர் சிறப்பு கவனம் செலுத்தி இந்திய தூதகரத்தின் உதவியுடன் கத்தாரின் சட்ட திட்டத்திற்கு  உட்பட்டு மறைந்த மீனவ சகோதரர் திரு. சசிக்குமார் அவர்களின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின்  செயலாளர் திரு. வலியுல்லாஹ் அவர்கள் தாயகம் சென்று.

நேற்று (26.07.21) காலை இறந்த மீனவ சகோதரர் திரு. சசிக்குமார்  அவர்களின் உடலை தாயகத்தில் அவரின்  குடும்பத்தினரிடம் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் செயலாளர் திரு. வலியுல்லாஹ் அவர்கள் ஒப்படைத்தார்.

இப்படிக்கு  

ஒருங்கிணைந்த_தமிழர்_பேரவை 

கத்தார் 

26.07.2021



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe