நூருள் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் ஏற்பாட்டில் " முதலாவது உலக விஞ்ஞான தொழிநுட்ப மாநாடு 2021" பீடாதிபதி கலாநிதி யூ. எல். அப்துல் மஜீத் தலைமையில் தொழிநுட்ப பீடத்தின் கூட்டமண்டபத்தில் இருந்து இணைய வழியாக இன்று ( 27) இடம்பெற்றது.
பேராசிரியர் அஜித் டீ அல்விஸ் இணையவழி மூலம் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு, புத்தாக்கம், நிலைபேரான விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செயலாளர், பொருளாளர் உட்பட மாநாட்டு குழுவினர் கலந்து கொண்டனர்.