Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையில் தேசிய விளையாட்டு தின நிகழ்வு.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடு பூராகவும் இந்நிகழ்வு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட்  அவர்களின் பணிப்புரைக்கமைவாக அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சித்திறனை விருத்தி செய்யும் வகையில் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்த நிகழ்வு அப்துல் மஜீட் மண்டபத்தில நேற்று (30) இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு அலுவலக உத்தியோகத்தர்களின் உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டல் நிகழ்வும் நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.சப்றி நிஸாரின் நெறிப்படுத்தலில் உடற்பயிற்சி நிகழ்சி இடம்பெற்றது. 

இதில், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முகம்மட், பிரதேச சபை  உறுப்பினர்களான என்.கோவிந்தசாமி, எஸ்.எம்.எஸ்.நிலுவ்பா, கே.எல்.இன்பவதி, கே.குலமணி, நிதியுதவியாளர் ஏ.ஜெ.எம்.ஜெசீல்,  பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஓலிம்பிக் போட்டியின் போது திரு.டங்கன் வைட் வெள்ளிப்பதக்கமொன்றை வென்றெடுத்த தினத்தை ஒவ்வொரு வருடமும் நினைவுகூரும் வகையில் இவ்வருடம் தொடக்கம்  தேசிய விளையாட்டு தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை பொது சேவைகள் மகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேற்கொண்டுள்ளது. 

ஆரோக்கியமான அரச சேவை சந்ததியொன்றை உருவாக்குவதன் மூலம் வினைத்திறனும், உற்பத்தி திறனும் கொண்ட அரச சேவையை உருவாக்கும் நோக்குடன் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe