சம்மாந்துறையைச் சேர்ந்த பிரதம சுகாதாரப் பரிசோதகர் (SPHI) றாஸிக் அவர்களின் மகன், பொறியிலாளர் வாஜித் அஹ்மட் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இலங்கையின் மாலபே SLIIT( Sri Lanka Institute of Information & Technology) பல்கலைக்கழகத்தில் தனது பொறியியல் பட்டத்தைப் பெற்று தற்சமயம் இலங்கையின் பிரதான பொறியியல் நிறுவனமான Hovael Construction Pvt Ltd இல், கொழும்பை தளமாகக் கொண்ட iroad திட்டத்தில் பொறியலாளராக (Civil Engineer) கடமையாற்றும் இவர் சமூகத்துக்கு பயன் தரும் விடயங்களில் ஆர்வமிக்கவர்.
அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் ஒரு போராளியாக தனது பயணத்தை ஆரம்பித்து அதன் தீவிர ஆதரவாளராக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போதிலும் அக்கட்சியின் அண்மைக்கால நகர்வுகளில் அதிருப்தியுற்று ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சியில் இணைந்ததாக எம்மிடம் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம் அரசியலின் எதிர்காலம் வெறும் "எதிர்ப்பரசியல்" எனும் மாயைக்குள் இருந்து வெளியேறி அரசுடன் இணைந்த பயணமே நம் சமூகத்தின் சுபீட்சத்திற்கு வழி அமைக்கும் எனவும் தெரிவித்தார். அந்த வரிசையில் உலமாக் கட்சியின் கொள்கையில் இவைகள் வெளிப்படையாகத் தெரிவதாகவும், இவ்வாறான கட்சிகளே நாட்டின் இறைமைக்காகவும் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணிக்கும் என திடமாக நம்புவதாகவும் ஐக்கிய காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதியின் எதிர்கால வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தினையும் கொடுக்கவுள்ளதாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார். எதிர்கால கட்சியின் திட்டங்களில் முழு பங்களிப்பை செலுத்துவதில் எப்போதும் பின்னிற்க போவதில்லை என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் இவர் ஐக்கிய காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச அமைப்பாளராகவாகவும் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீதினால் தெரிவு செய்யப்பட்டார்.