Ads Area

சௌபாக்கிய வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி பயனாளியிடம் வீடு கையளிப்பு!

 சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை  பிரதேசத்தில்  சமூர்த்தி லொத்தர் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் "திரியபியச"சமூர்த்தி விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான  வீடுகளை  பயனாளிகளிடம் கையளிக்கும்  நிகழ்வு  சௌபாக்கிய வாரத்தை முன்னிட்டு   நேற்று  (03)  மாலை  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

சமூர்த்தி லொத்தர் நிதியுதவியின் கீழ் ஒரு வீட்டிற்கு  தலா  இரண்டு  இலட்சம் ரூபா  செலவில், பயனாளிகளின் பங்களிப்புடன் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.  

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள மட்டக்களப்பு தரவை-02 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட  பயனாளிகளுக்கே  இவ்வீடு  வழங்கிவைக்கப்பட்டது.

நிரந்தர வீடில்லாத, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடுகள்  குறித்த பயனாளியின் சொந்த இடத்தில்  நிர்மாணிக்கப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம்,கிராம சேவகர்,சமுர்த்தி உத்தியோகத்தகர் என குறிப்பிட்ட அளவானோர்  சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe