Ads Area

கல்முனை சுகாதாரப் பிரிவில் தடுப்பூசி ஏற்றலில் சாதனை படைத்தமைக்காக 40 ஆயிரம் ஊசிகள் அன்பளிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா)

எமக்குக்கிடைத்த 50 ஆயிரம் தடுப்பூசிகளை இரு நாட்களுள் துரிதமாக ஏற்றியமைக்காக சுகாதார அமைச்சு பாராட்டுத் தெரிவித்ததுடன் ஊக்குவிப்பு பரிசாக மேலும் 40 ஆயிரம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக இன்று (28) கிடைக்கவிருக்கின்றன. அதன் காரணமாக இன்று 1 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று கிடைக்கவிருக்கின்றன. நாளை (29) இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கல் மிகவும் துரிதமாக 13 சுகாதாரப் பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்படும்.

இவ்வாறு  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குண. சுகுணன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

கிழக்கு மாகாணத்தில் இதுவரை நாளொன்றில் ஏற்றப்பட்ட அதிகூடிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாவிருந்தது. ஆனால் எமது கல்முனைப் பிராந்தியத்தில் முதல் நாள் 20641 மறுநாள் 24560 என தினமும் 20 ஆயிரத்தை தாண்டி சாதனை படைத்தது. இதற்காக ஒத்துழைத்த சுகாதாரத்துறையின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

கல்முனைப்பிராந்தியத்தில் 4 லட்சத்து 88 ஆயிரம் பேர் சனத்தொகையாகப் பதிவிடப்பட்டுளள்து. இவர்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி பெற தகுதியாவர்களாவர். எனவே 5 லட்சம் தடுப்பூசிகள் தேவையாகின்றன.

பிராந்தியத்தின் கணக்கெடுப்பின்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 51 ஆயிரம் பேராவர். ஆசிரியர்கள் 85000 பேருள்ளனர். அரச ஊழியர்கள் 15 ஆயிரம் பேருள்ளனர். முப்படை பொலிசார் 2500 பேரும் கர்ப்பிணித்தாய்மார்கள் 1500 பேரும் உள்ளனர்.

இந்தநிலையில் முதலில் கிடைக்கப்பபெற்ற 50 ஆயிரம் தடுப்பூசிகள் வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன.

மேலும் விரைவில் அடுத்த தொகுதி தடுப்பூசிகள் வந்து சேர்ந்தவுடன் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe