ஏ.பி.எம்.அஸ்ஹர்.
நிந்தவூரிலுள்ள சிங்காரத்தோப்பு உல்லாசப் பிரதேசத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப்பரவலைகவனத்திற்கொள்ளாமல் இங்கு உள்ளூர் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டே இவ் வேண்டுகோளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின்கீழ் சிங்காரதோப்பில் கொவிட் சுகாதார விதிமுறைகளை மீறி ஒன்று கூடியவர்களிற்கு பொதுசுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின்படி சம்மாந்துறை, ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களிலிருந்து வருகை தந்திருந்தவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாடெங்கும் மரண அபாயத்துடன்கூடிய டெல்டா கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்துவருவதனால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்வோம்.
எனவே தொற்று நிலை நீங்கும்வரை ஒன்றுகூடல்களிலிருந்து தவிர்ந்திருப்போம். சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவோம் முடியுமான வரை வீட்டிலேயேஇருப்போம் எமது உறவுகளை பாதுகாப்போம் எனவும் தெரிவித்தார்.இதே வேளை நிந்தவூரிலுள்ள சிங்காரத்தோப்பு உல்லாசப் பிரதேசம் என்பது தற்போது கிழக்கின் மிக முக்கிய உல்லாசப் பிரதேசங்களில் ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Thanks - Madawala News.