(வி.ரி.சகாதேவராஜா)
வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் வாழும் இல்ல முகாமையாளர் மற்றும் ஆறு மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 10 மாணவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் காரைதீவைச் சேர்ந்த இல்ல மேற்பார்வையாளருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் வந்து அன்ரிஜன் சோதனை செய்து பார்த்த போது கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
அதனையடுத்து சுகாதாரத் துறையினர் அவரை அட்டாளைச்சேனை ஆயுர்வேத கொவிட் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
நேற்று (8) சனிக்கிழமை சுகாதாரத்துறையினர் வீரமுனை இல்லத்திற்குச் சென்று அங்கு வாழும் 10 மாணவர்கள் மற்றும் சமைக்கும் பெண்மணி ஆகியோருக்கு அன்ரிஜன் சோதனை செய்தபோது ஆறு மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இல்ல முகாமையாளர் பொறியியலாளர் தா.வினாயகமூர்த்தி சுகாதாரத்துறையினரோடு இல்லமாணவரின்நிலை பற்றிகலந்துரையாடினார்
கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணனின் உத்தரவின்பேரில் இல்லத்தை முடி அவர்களனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
10 நாட்களின் பின்னர் மீண்டும் அன்ரிஜன் சோதனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.