சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் சட்டரீதியான முறையில் வசிக்கும் வெளிநாட்டிருக்கும் சவுதியில் சொத்துக்கள் வாங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டினர் சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் அவர்களிடம் செல்லுபடியாகும், காலாவதியாகாக வதிவிட ஐடி வைத்திருத்தல் வேண்டும், வாங்கும் சொத்துப் பற்றிய தகவல்களை தொடர்பில் தெரிந்திருப்பதோடு அதற்கான செல்லுபடியாகும் உரிமைப் பத்திரத்தின் நகலையும் அளிக்க வேண்டும், மேலும் ஒரு சொத்தை வாங்குவதாக இருந்தால் அதற்கு முதல் சவுதியில் வேறு எந்த சொத்துக்களும் வாங்கியிராதவராக இருத்தல் வேண்டும்.
சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினர் இதனை அப்ஷர் தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa