Ads Area

கல்முனை பிரதேசத்தில் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்குரிய உயர்மட்ட கலந்துரையாடல்.

 (சர்ஜுன் லாபீர்,எம்.என்.எம்.அப்றாஸ்) 

நாட்டில் தற்போது பரவுகின்ற கொரோனா வைரஸின் வீரியம் அடைந்த டெல்டா பரவலினுடைய ஆபத்திலிருந்து கல்முனை பிரதேச மக்களை பாதுகாக்கும் விழிப்பூட்டும் உயர்மட்டக் கூட்டம் அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.சி சமிந்த லமாகேவாவின் ஆலோசனையின் பெயரில் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் அவர்களின் தலைமையில் இன்று மாலை (12) கல்முனை முஹைத்தீன் பள்ளிவாசலில் நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் நாட்டில் தீவரமாக பரவிவரும் கொரோனாவினை கல்முனை பிரதேசத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை உரியமுறையில் பின்பற்றுவதற்கும் மக்களுக்கு பள்ளிவாசல்களின் ஊடாக அறிவிப்பு செய்வதற்கும்,பொதுவாக கடற்கரைப் பிரதேச எல்லைகளுக்குள் அதிகமான மக்களின் நடமாட்டங்களை குறைப்பதற்கும், ஒன்றுகூடல்களை குறைப்பதற்கும் உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

இவ் உயர்மட்டக் கூட்டத்தில் அக்கரைப்பற்று 241வது பிரிவு இராணுவ பொறுப்பதிகாரி  கேணல் அபோயகோன்,லெப்டினன்ட் கேணல் அனஸ் அஹமட், சமீந்த புஸ்பகுமார,கல்முனை இராணுவ படைப்பிரிவு பொறுப்பதிகாரி மேஜர் விஜயகோன்,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி,கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம் வாஹீட் ,டாக்டர் எம்.சராப்தீன் உட்பட கல்முனை பிரதேச அனைத்துப் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள்,உலமாக்கள்,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதேவளை கல்முனை  தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட பிரிவில் தொடர்ந்தும் கொரோனா கட்டுப்பாட்டு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe