Ads Area

துருக்கியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பயணிகள் பேருந்து!: 15 பேர் உயிரிழப்பு.

துருக்கியில் பேருந்து உருண்டு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சோங்குல்தாக் என்ற இடத்திலிருந்து இஸ்மிர் என்ற இடத்திற்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலை வளைவில் திரும்பிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

படுகாயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. தொடர்ந்து பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe