தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் தாயிப் பிரதேசத்தில் 51 ஆயிரம் மின்விளக்குகள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒட்டக மாதிரி ஒன்று கிண்ணஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது.
இது 10 மீட்டர் அகலம் மற்றும் 4.65 மீட்டர் உயரம் கொண்டதாகும். மேலும் இதில் ஒட்டக வடிவில் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் 51,000 மின் விளக்குகள் ஒளிரும் படியாக அமைக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.