(காரைதீவு சகா)
விழிப்புலனற்ற வளவாளர் ஒருவர் ,விசேட கல்விப்பிரிவில் பயிலும் மாற்றுத் திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கை நடாத்தி சாதனை படைத்தார்.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட விசேட கல்விப்பிரிவில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
அந்தந்த வலயக் கல்விப் பணிமனைகள் இக் கருத்தரங்குகளை சுகாதார நடைமுறைகளுக்கிணங்க நடாத்திவருகின்றன.
அந்த அடிப்படையில் , சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமின் வழிகாட்டலுக்கமைவாக , விசேடகல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.ஜ.அகமட்டின் ஏற்பாட்டில் இக்கருத்தரங்கு நேற்று (10) சம்மாந்துறை அல்அர்சத் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அவ்வமயம் ,விழிப்புலனற்ற சம்மாந்துறை சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் கவுன்சிலராக பணியாற்றும் பட்டதாரியான ,அப்துல் சலாம் வளவாளராகக் கலந்துகொண்டு விளக்கமளித்தார். பிறேயில் முறையிலமைந்த குர்ஆன் பிரதியைக் காண்பித்து பூரண விளக்கமளித்தார்.
பிரதமஅதிதியாக உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்குட்பட்ட நாவிதன்வெளி சம்மாந்துறை மற்றும் இறக்காமக் கோட்டங்களிலுள்ள பாடசாலைகளின் செயமலர்வுகள் நடைபெற்றன.