(அஸ்லம் எஸ்.மௌலானா)
நாடளாவிய ரீதியில் இயங்கும் இணையத்தளங்களை பதிவு செய்து, அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களின் பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளுமாறும் ஊடக அமைச்சு கேட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை ஊடக அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.
இணையத்தளங்களை பதிவு செய்யும் நடைமுறை 2012ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வருகின்றது. நாட்டில் இயங்கும் அனைத்து இணையத்தளங்களும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டு, அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் ஒவ்வொரு வருடமும் அப்பதிவு புதுப்பிக்கப்பட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.