குவைத் விமான நிலையம் விரைவில் அனைத்து நாடுகளிலிருந்தும் நேரடி பயணிகள் விமான சேவைக்கு திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குவைத் விமான நிலையம் மிக விரைவில் அனைத்து நாடுகளிலிருந்தும் நேரடி பயணிகள் விமானங்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அரபு நாளிதழ் அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது.
அல் -ராய் அரபு செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குவைத் விமானநிலையம் அனைத்து நாடுகளுக்கும், முன்பு தடை செய்யப்பட்ட நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் நேரடி விமானங்களை இயக்க அனுமதிக்கும் முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
பயணத்திற்கு முன் தடுப்பூசி மற்றும் கட்டாய PCR சான்றிதழ் பெறுவதற்கான ஒப்புதல் பெறுவது குவைத்துக்கு வருவதற்கு குறைந்தபட்ச தேவையாக இருக்கும்.
தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டினர் குவைத்தில் நுழைவதற்கான அனுமதி அளித்த பிறகும், இந்தியா உட்பட சில நாடுகளுக்கு நேரடி விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி செலுத்தப்பட்டு, குவைத் சுகாதாரத்துறையின் அனுமதி கிடைத்த பிறகும் குவைத் வர முடியாமல் இந்தியர்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.
தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.