தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க கடுமையான சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. யாரேனும் சிறுவர் துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 50 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதோடு, சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என ஐக்கிய அரபு இராஜ்ஜியம் எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பிரபல வழக்கறிஞர் ஆசிஸ் மெஃத்தா (UAE-based lawyer Ashish Mehta) குறிப்பிடுகையில், ஐக்கிய இராஜ்ஜிய வாடீமா சட்டத்தின் பிரிவு 69 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஷ்பிரயோகங்கள் பெற்றோர்கள் மூலமாக ஏற்பட்டாலும் அவர்களுக்கெதிராகவும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு பொலிஸார் கடந்த 2020 ம் ஆண்டு 103 குழந்தைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை மேற்கொண்டிருந்தனர் இதில் பெரும்பாலானா வழக்குகளில் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அவர்கள் பெற்றோரால் மற்றும் உறவினர்களால் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.