Ads Area

காரைதீவு தவிசாளர் விவகாரம் : முஷாரப் எம்.பி கண்டனம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதானியுடனும் பேசினார்.

நூருல் ஹுதா உமர்

காரைதீவு தவிசாளர் கி. ஜெயசிறிலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளை கணனி குற்றப்பிரிவில் ஒப்படைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தலைமை காரியாலயம் முதல் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் மதநிந்தனை செய்த குற்றச்சாட்டுக்காக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத்திடம் தான் கலந்துரையாடிய போது அவர் தெரிவித்ததாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுனபின் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக சர்ச்சையாகியுள்ள தவிசாளர் ஜெயசிறிலின் மதநிந்தனை விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும், இந்த விவகாரத்தின் ஆழம் அறிந்த சிவில் அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர். இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியத்தை தான் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத்திடம் தெரிவித்துள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் அடுத்த கட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் சட்டநடவடிக்கைக்கான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும் இந்த விடயம் தொடர்பில் என்னுடைய கண்டனங்களை தெரிவித்து கொள்வதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளிடம் இது தொடர்பில் தான் எடுத்துரைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe