Ads Area

சாய்ந்தமருதில் சம்பவம் : பாடசாலை பூட்டை உடைத்து அதிபருக்கு நிர்வாகத்தை கையளித்த வலயக்கல்வி பணிப்பாளர் !

 நூருல் ஹுதா உமர் 

சாய்ந்தமருது கமு / கமு/ அல்- ஹிலால் வித்தியாலய  அதிபராக நியமிக்கப்பட்ட யு.எல். நஸாரை பாடசாலை நுழைவாயில்  பூட்டை உடைத்து கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் தத்துணிவில் அதிபராக நியமித்து கடமைகளை பெறுப்பளித்த சம்பவம் இன்று (04)  நடைபெற்றது.

அந்த பாடாசாலை அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம். வைஸால் வருடாந்த இடமாற்றம் மூலம் வேறு பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டதை அடுத்து உருவான வெற்றிடத்திற்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்ட அதிபர் யு.எல். நஸார் அடங்கிய பிரமுகர்கள் இன்று கடமைகளை பெறுப்பேற்க வருகை தந்திருந்தபோது பாடசாலை நுழைவாயில் பூட்டப்பட்டிருந்ததுடன் திறப்பும் யாரிடமும் கையளித்திருக்கப்பட வில்லை என்பதை அறிந்த கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் பாடசாலை பூட்டை உடைத்து புதிய அதிபரிடம் பாடசாலை நிர்வாகத்தை கையளித்தார். 

இது தொடர்பில் எமது ஊடகம் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளரிடம் வினவியபோது பாடசாலை அதிபராக இருந்த எம்.எஸ்.எம். வைஸால் சுகயீனம் காரணமாக வருகைதரவில்லை என்றும் திறப்பு யாரிடமும் வழங்கப்படாமலிருந்த காரணத்தினால் பூட்டை உடைக்க நேர்ந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இன்று நிர்வாக கடமைகளை பொறுப்பேற்ற அதிபர் நஸார் நாளை அல்லது நாளை மறுதினம் முழுமையாக பாடசாலையை பொறுப்பேற்பார் என்றார். இந்த நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலை பிரதியாதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பிராந்திய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe