சம்மாந்துறை அன்சார்.
நியூசிலாந்தில் கோவிட் - 19 தொற்றாளர் ஒருவர் இனங் காணப்பட்டதனால் அந்நாடு 3 நாட்களுக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் அதிக மக்கள் செரிந்து வாழும் ஆக்லாந்துப் பிரதேசத்திலேயே கோவிட் தொற்றாளர் இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நகரம் ஏழு நாட்களுக்கு பூட்டப்பட்டிருக்கும்.
இனங் காணப்பட்ட தொற்றானது புதிய வகை வைரஸான டெல்டா வைரஸா என்பது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார் இருந்தும் டெல்டா வைரசின் ஆபத்தினை உணர்ந்து விரைவாக செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk