சீனாவின் ஜியாங்சு மகாணத்தில் சுஜோவில் நடைபெற இருந்த திருமணத்தில் மணமகள் தனது தொலைந்து போன மகள் என்பதை தாய் கண்டறிந்து கண்ணீர் வடித்துள்ளார். இந்த சம்பவம் மார்ச் 31-ம் தேதி நடைபெற்றுள்ளது. மருமகளின் கையில் இருந்து பிறப்பு அடையாளத்தை வைத்து இவர் நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போன தனது மகள் என்பதை அவர் தெரிந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து மணப்பெண்ணின் பெற்றோரிடம் இந்த பெண்ணை நீங்கள் 20 வருடங்களுக்கு முன் தத்தெடுத்து வளர்த்து வருகிறீர்களா? என்று கேட்டுள்ளார். அவரின் கேள்வியை கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் தங்களது நீண்ட நாள் ரகசியத்தை உடைத்துள்ளார்கள். ஆம் நாங்கள் இந்த பெண்ணை சாலையோரத்தில் கண்டெடுத்தோம். இவர் தனியாக ஆதரவின்றி இருந்ததால் எங்கள் சொந்த குழந்தை போல் வளர்த்து வந்தோம் என்றனர்.
இதை கேட்ட மணமகள் கண்ணீர் வடித்து தன்னை பெற்றெடுத்த பெற்றோரை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். தனது திருமண நாளில் மிகப்பெரிய மகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியதை எண்ணி பெண் ஆனந்தம் அடைந்தாள். ஆனால் இந்த சம்பவம் இதோடு முடியவில்லை, இதற்கு பின்னும் ஆச்சரியங்கள் நிறைந்து இருந்தது.
மணப்பெண் தனது சகோதரரை திருமணம் செய்வதில் தயக்கம் காட்டினார். ஆனால் மணப்பெண் அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அந்த மணமகனையும் அவர்கள் தத்தெடுத்து தான் வளர்த்து வந்துள்ளனர். மகள் காணமால் போன பின் ஒரு வருடமாக அவரை தேடி வந்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதாலும் இதற்கு மேலும் தேடுவது பயன் இருக்காது என்பதால் இந்த சிறுவனை தத்தெடுத்து அவர்கள் வளர்த்து வந்துள்ளனர்.
மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் உடல்ரீதியான சொந்தங்கள் இல்லை என்பதால் இந்த திருமணத்தில் என்ற பிரச்சனையும் இருக்காது என்று கூறியுள்ளனர். இதனால் நிம்மதியடைந்த தம்பதியனர் திருமண சடங்குகளை மேற்கொண்டனர். திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு இந்த நிகழ்வு இரட்டிப்பு சந்தேஷமாக இருந்தது.