சம்மாந்துறை அன்சார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வளர்ச்சி குறித்து விசாரிக்க ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயிடம் பேசியதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக 2001 முதல் 2014 வரை பணியாற்றினார். தற்போது அவர் தலிபான்களுடன் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
"ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியிடம் ஆப்கானிஸ்த்தான் நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரித்த பிரதமர், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவினை உறுதிப்படுத்துவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ட்வீட் செய்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதால், அமெரிக்க ஆதரவு ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் தோல்வியைத் தொடர்ந்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்
செய்தி மூலம் - https://www.newswire.lk