Ads Area

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் நுழைபவர்கள் தொடர்பில் சில விதிமுறைகள் இன்று முதல் திருத்தப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் நுழைவதற்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன.

அதன்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொரு நபரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தலுக்கு தயார்ப்படுத்தப்பட்ட  ஹோட்டல் அல்லது இடமொன்றில் அவர்கள் தங்கியிருக்க வேண்டும்.

பிசிஆர் சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவராக இருந்தால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்.

அத்துடன், புதிய வழிகாட்டுதல்களின்படி, பிசிஆர் சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. 

(Madawala News)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe