ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாஸ்கோவிற்கு நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியதால் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் குழு ஒன்று இன்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மாஸ்கோவின் டொமோடெடோவோ விமான நிலையம் (DME) ஆகியவற்றுக்கு இடையே 6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விமானப் பயணப் போக்குவரத்து தொடங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 28 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளுக்காக கட்டமைக்கப்பட்ட ஏர்பஸ் ஏ 330 ஐப் பயன்படுத்தி தனது விமானங்களை ரஷ்யாவிற்கு இயக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செய்தி மூலம் - https://www.newswire.lk