Ads Area

பேயோட்டுவதாகக் கூறி 45 மற்றும் 19 வயது இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மந்திரவாதி - இலங்கையில்.

பேய் ஓட்டுவதாகக் கூறி நடாத்தப்பட்ட சிறப்பு பூஜையின் போது இரண்டு பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ஹாலி​எல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

45 வயதான பெண்ணும் 19 வயதான யுவதியுமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பேயோட்டுவதற்காக வந்திருந்த மந்திரவாதி , வீட்டிலிருந்த சகல ஆண்களையும் முச்சந்திக்கு பூஜை நடக்கும் இடத்திலிருந்து வெளியில் (முச் சந்தியில்) நிற்க வைத்து விட்டு அறைக்குல் இரு பெண்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி மூலம் - https://www.newswire.lk






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe