(வி.ரி.சகாதேவராஜா)
'ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலை' என்ற திட்டத்தின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவியரீதியில் அறநெறிப்பாடசாலைகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள கோரக்கர் பிள்ளையார் ஆலய அறநெறிப் பாடசாலைக்கான கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் திரு எ.எல்.எம்.ஹனீபா தலமையில் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட இந்து சமய கலாசார அலுவலர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு முன்னிலை அதிதி ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சுவேந்திரன் குருக்கள் முன்னிலையில் சுகாதார நடைமுறை விதிகளுக்கமைவாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய 2லட்சருபா நிதி அங்கு கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் முன்னிலை அதிதி ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சுவேந்திரன் குருக்கள் அறநெறி பொறுப்பாசிரியர் , எஸ்.தினேஸ்குமார் பாடசாலை அதிபர் எஸ்.இளங்கோபன் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி எஸ்.சிறிப்பிரியா பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் சமுா்த்தி உத்தியோகத்தர்கள் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆலய தர்மகர்த்தாக்கள் சம்மாந்துறை ஆலய ஒன்றிய பிரதிநிதிகள் கலாசார உத்தியோகத்தர்கள் அற நெறிப்பாடசாலை ஆசிரியர்கள்மாணவர்கள் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.