(எம். என். எம். அப்ராஸ்)
நாட்டில் தற்போது கொரோனா தொற்று நிலை அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலினுடைய ஆபத்திலிருந்து கல்முனை பிரதேச மக்களை பாதுகாக்கும் முகமாக கல்முனை பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் சுகாதார வழிமுறை அறிவுறுத்தல்கள் மற்றும் அண்டிஜன் பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இந்நிலையில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி கல்முனை மருதமுனை பிரதேச கடற்கரை பகுதிகள் மற்றும் வீதிகளில் வீணாகநடமாடியவர்கள் சுகாதார பிரிவினரால் எச்சரிக்கை செயயப்பட்டதுடன், அறிவுறுத்தபட்ட துடன் மேலும் அண்டிஜன் பரிசோதனைகளும் நேற்று (14) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி தலைமையில் பொது சுகாதாரவைத்திய அதிகாரிகளான எம். நியாஸ் , எம். ஜூனைதின் , எம் . ரவிச்சந்திரன் , ஜே. எம். நஜிமுத்தீன்,. ஐ. எல். எம். இத்ரீஸ் ஆகியோருடன் இராணுவத்தினர் இணைந்து அண்டிஜன் பரிசோதனை ,சுகாதார அறிவுறுத்தல்களை மேற்கொண்டனர்.
இதன் போது இங்கு கருத்து தெரிவித்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி -கொரோனா தொற்று நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,கல்முனை தெற்கு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவில் குறிப்பாக கல்முனை மற்றும் மருதமுனை கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்தும் முகமாக இவ் சுகாதார நடவடிக்கைகள் இடம்பெற்றது.
குறித்த கடற்கரை பகுதிகளில் அதிகமாக பொது மக்கள் ஒன்று கூடுவதால் தொற்று நிலை அதிகரிக்கவாய்ப்புகள் உள்ளது முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோம் என்றாலும் அலட்சியாக நடக்க கூடாதுபொது மக்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்
மேலும் எமது கொரோனா கண்காணிப்பு நடவடிக்கைகள் மிகவும் இறுக்கமான முறையில் இடம்பெறும் பொதுஇடங்கள், வீதிகளில் தேவையின்றி நடாமாடுவது மற்றும் நெரிசலாக கூடுவது சமுக இடைவெளி இன்றிமுககவசம் அணியாமல் இருப்பது , கடற்கரைகளில் ஒன்று கூடி இருப்பது போன்றவை இடம்பெறுமாயின்
மிகவும் கண்டிப்பான முறையில் பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு எதிராகதனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்று கூடலை முற்று முழுதாக தவிர்த்துநடக்க வேண்டிமெனவும் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்றினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவின் அறிக்கைகளின் படி 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இதுவரை 103 மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் ,கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் 11 மரணங்கள் இடம்பெற்றுள்ளது.