ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருக்கும் இந்தியர்கள், அந்நாட்டுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அந்நாட்டு அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானப்போக்குவரத்து இன்னும் முழுமையாக சீரடையவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானம் மூலம் செல்லும் இந்தியர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கிளம்புவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
இதற்கு முன்பாக, 4 மணி நேரத்துக்கு முன்பாக பி.சி.ஆர். டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் இருந்து கூடுதலாக இரண்டு மணி நேரத்தை அதிகரித்துள்ளது. மேலும், டிரான்சிட் பயணிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளது
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
1. இதுவரை இருந்த 4 மணி நேரத்துக்கு முன்பாக பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக 6 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர் டெஸ்ட் வைத்திருந்தால் கூடபோதும்.
2. இந்தியா, பாகிஸ்தான், நேபாள், இலங்கை மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் டெஸ்ட் முடிவுகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
3. ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருக்கும் இந்தியர்கள், அந்நாட்டுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் விசா வைத்திருந்தால் யு.ஏ.இ செல்லலாம்.
4. அபுதாபி செல்பவர்கள் 10 வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். Ras al-Khaimah Airport -க்கு செல்பவர்கள் 12 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
5. விமான நிலையங்களில் கொடுக்கப்படும் மெடிக்கல் அப்ருவ் wristband - பயணிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லேப்களில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் டெஸ்ட் மட்டுமே அங்கீகரிக்கபட்டவையாக எடுத்துக்கொள்ளப்படும் என யு.ஏ.இ தெரிவித்துள்ளது.
1. சூர்யாம் லேப், ஜெய்ப்பூர் (Suryam Lab, Jaipur)
2. டாக்டர் பி.பாசின் பாத்லேப்ஸ், டெல்லி (Dr P. BHASIN Pathlabs(p) Ltd, Delhi)
3. நோட்டபிள் டையக்னோஸ்டிக்ஸ் (Noble Diagnostic Centre, Delhi)
4. 360 டையக்னோஸ்டிக்ஸ் & ஹெல்த் சர்வீசஸ்
பயணிகள் கட்டாயம் Alhosn app -ல் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், தனிமைப்படுத்துதலில் இருக்கும்போது 9வது நாளில் மீண்டும் பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து இண்டிகோ விமான நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முதன் முதலாக விமான சேவையை தொடங்க உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.