தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபிய சுகாதார அமைச்சினால் 6 வகையான கொரோனா தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
01. Oxford-AstraZeneca,
02. Pfizer-BionTech,
03. Johnson & Johnson,
04. Moderna,
05. Sinopharm,
06. Sinovac.
போன்ற ஆறு வகையான தடுப்பூசிகள் மாத்திரமே தற்போது சவுதி அரேபிய சுகதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு வகையான தடுப்பூசிகள் ஏதும் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அது குறித்து சவுதி சுகாதார அமைச்சு அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sinopharm மற்றும் Sinovac தடுப்பூசிகள் சவுதி அரேபியாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாதிருந்து தற்போது அவைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
சவுதி அரேபியாவிற்கு வருகை தரவிருப்போர் மேற்குறித்த தடுப்பூசிகள் விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa