இன்றைய தினம் ( 2021.09.01 ) ஆசிரியர், அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்ற எனது அதிபர், முன்னைய நாள் சம்மாந்துறை தேசிய பாடசாலை அதிபர் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய A.C.A. இஸ்மாயீல் சேருக்கு நன்றியும், பிறந்தநாள் வாழ்த்துக்களும்.
1984 ம் ஆண்டு ஆரம்பித்த உங்கள் ஆசிரியர் பயணம், 1999ம் ஆண்டு முதல் ஆரம்பித்த அதிபர் பயணம், 2021ம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. சுமார் 37 வருடங்களாக சம்மாந்துறை மண்ணின் பெருமைக்காக உழைத்த உங்களை கெளரவப்படுத்துவது எனது அகம் நிறைந்த சந்தோஷம் .
உங்கள் அதிபர் காலப்பகுதியில் அஸ்ஸமா வித்தியாலயம் தொடக்கம் தேசிய பாடசாலை வரை எதிர் கொண்ட சாவல்களையும், சாதனைகளையும் என்னோடு பகிர்ந்த அத் தருணங்களில் மெய் சிலிர்த்துப் போனேன்.
2016ம் ஆண்டு சம்மாந்துறை தேசிய பாடசாலையின் அதிபராக கடமையேற்ற காலத்திலிருந்து எமது பாடசாலைக்காக செய்த தியாகங்கள் அளப்பெரிது.
2016ம் ஆண்டின் சாதாராண தரத்தில் அதிக மாணவர்களை 9A சித்தியடைய வைத்தது சாதனையே.
கொவிட் - 19 காலத்தில் பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்குபடுத்திய Online வகுப்புகளை வெற்றிகாமாக கொண்டு சென்றதில் சாதனையே.
கடந்த 5 வருடங்களுக்குள் உயர் தரத்தில் சாதனைகள் புரிந்து அதிக மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றதில் உங்கள் பங்களிப்பும் அளப்பெரிது, அதுவும் நிலையான சாதனையே.
மாணவர்களின் ஒழுக்க விடயத்தில் அதிக கரிசணை கொண்டு,வழி நடாத்தியதும் சாதனையே.
மாணவர்களோடு அன்பாகப் பழகி, மாணவர்களின் ஆதரவினைப் பெற்றதுவும் சாதனையே.
மாணவர்கள் பாராளுமன்றத் தேர்தலினை வெற்றிகரமாக நடாத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு நீங்கள் ஆற்றிய ஆளுமையான உரையில் எங்களை கவர்ந்ததுவும் சாதனையே.
பழைய மாணவர்கள் அமைப்பினை புத்துயிர் கொடுத்து தலைமை தாங்கியமையும் சாதனையே.
மாணவத் தலைவர்களுக்கு வழங்கிய கெளரவம் பாராட்டப்பட வேண்டியதுவே.
ஆசிரியர்களையும் மாணவர்களையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்தி பாடவிதானங்களை நெறிப்படுத்தியதும் சாதனையே.
எமது பாடசாலையை அழகுபடுத்துவதில் முன்னின்று செயற்பட்டதில் வெற்றி பெற்றீர்கள் அதுவும் சாதனையே.
மூலிகை சார்ந்த விடங்களில் கரிசணை கொண்டு தோட்டம் அமைத்து பெறுமதியான செயற்பாட்டினை முன்னெடுத்தமையும் சாதனையே.
அணைத்து அரசியல் செயற்பாட்டாளர்களையும் அரவணைத்து பாடசாலைக்குள் அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் சென்றமையும் சாதனையே.
உங்களுக்கெதிராக வெளிவந்த விமர்சனங்களை செயற்பாடுகளால் முறியடித்தது சாதனையே.
இவ்வாறு பல சாதனைகளை செய்தீர்கள்.
எனது குறிப்பில்,
2017ம் ஆண்டு மாகாண மட்ட கிரிக்கட் தொடருக்காக செல்லும் போது போதிய நிதி இல்லாமல் தவித்த நேரத்தில் உங்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக உங்கள் சொந்த நிதியில் பாரிய தொகையினை வழங்கி வழியனுப்பியிருந்தீர்கள்.
நான் சிரேஷ்ட மாணவத்தலைவராக இருந்த போது அதிகாலையிலேயே பாடசாலைக்கு வருவீர்கள், பல நல்ல விடயங்களை பாடசாலை சார்ந்தும், அதே நேரத்தில் எனது வாழ்க்கைக்கும் பகிர்ந்திருக்கின்றீர்கள்.
இன்னும் பல குறிப்புகள் என்னிடம் உள்ளன.
சேவையின் இறுதிக் கால கட்டத்தில் கடினமான பல சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்தீர்கள் என்பது கவலையான விடயமே.
அவ்வாறு சவால்களுக்கு உட்படுத்தி உங்களின் தகுதியையோ, தரத்தினையோ அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை என்பதுவே நிதர்சன உண்மை ஆகும்.
மேலதிகமாக, எமது பாடசலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 2015 O/L Batch Foundation க்கு அங்கீகாரம் வழங்கியமைக்கு நன்றி.
இவற்றுக்கு மேலாக என்னோடு நட்பு பாராட்டும் வகையில் பாடசாலை நாட்களிலிருந்து இன்று வரையிலும் மதிப்போடு பழகும் உங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
சம்மாந்துறை மண்ணின் பொக்கிஷங்களில் ஒருவர் நீங்கள், உங்களுக்கு வல்ல இறைவன் நோயற்ற நீண்ட ஆயுளை வழங்க பிராத்தனை செய்து கொள்கின்றேன்.
என்றும் உங்கள் மாணவன்.
அமீர் அப்னான்,
பழைய மாணவர்,
தேசிய பாடசாலை,
சம்மாந்துறை.