Ads Area

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை ஊசி போடப்பட மாட்டாது.

எமது அலுவலகத்தினால் கொவிட்-19 கொரோணா தடுப்பூசி நடவடிக்கைகளை மூன்று தினங்களாக 4 நிலையங்களில்  கிராம சேவகர் பிரிவு அடிப்படையில்  மேற்கொண்டு வருகின்றோம். எங்களது அலுவலத்திற்கு கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் இன்றுடன் முடிவுற்ற நிலையில் நாளை எங்களது நிலையங்களில் தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதனை தெரிவித்து கொள்கின்றேன்.

சாய்ந்தமருது 6ம், 13ம், 17ம் பிரிவுகளுக்கான மற்றும் தடுப்பூசிகள் பெற தவறியவர்களுக்கான  தடுப்பூசி நடவடிக்கைகள் மிக விரைவில் வழங்கப்படும் என்பதுடன் அதற்கான கால அட்டவணைகளும் எமது அலுவலகத்தினால் வெளியிடப்பட்டு பொது மக்களாகிய உங்களுக்கு அறிவிக்கப்படும்.

ஆகவே தடுப்பூசி பெற தவறியவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மிக அவசரமாக எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும் என்பதுடன் தடுப்பூசிகளை பெறாதவர்கள் திகதி அறிவிக்கப்பட்டதுடன் பெற்றுக் கொள்ளுமாரும் கேட்டுக் கொள்கின்றேன்.

டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட்

சுகாதார வைத்திய அதிகாரி,

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்- சாய்ந்தமருது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe