Ads Area

தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற இந்தியரின் நேர்மையினை பாராட்டி கௌரவித்த அமீரக காவல்துறை.

அமீரகத்தின் எமிரேட்டுகளில் ஒன்றான அஜ்மான் காவல்துறை இந்தியரான தமிழக இளைஞரை கவுரப்படுத்தி சான்றிதழ்களை வழங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இந்தியரான பாண்டியன் வெளியே சென்றபோது ஒரு ATM அருகில் பெரும் தொகை கிடப்பதை கண்டார். 

இதையடுத்து பாண்டியன் நேர்மை தவறாமல் காவல்நிலையம் சென்று அந்த பணத்தை ஒப்படைத்தார். இதையடுத்து அவருடைய நேர்மையினை பாராட்டும் விதமாக லெப்.கேணல் அப்துல்லா கல்பான் அப்துல்லா அல் நுஐமி அவர்கள் இந்தியரான பாண்டியனை தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக அழைத்து நேர்மையையும் மற்றும் பாதுகாப்பாக தொகையை திருப்பி அளித்ததர்காக பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். 

சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் உரிமைகளை பாதுகாக்க பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக, இவர்களை போன்ற நேர்மையான நபர்களை கவுரப்படுத்த அஜ்மான் காவல்துறை எப்போதும் ஆர்வமாக இருப்பதை அதிகாரி சுட்டிக்காட்டுகிறது. 

அதுபோல் பாண்டியன் அஜ்மான் காவல்துறைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்தார், மேலும் இது தனக்கு கிடைத்த பெரிய கவுரவம் என்று அரபு தினசரி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வமாக வலைதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். 

செய்திக்கு நன்றி - www.arabtamildaily.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe