Ads Area

அனைவரும் அக்டோபர் முதல் நேரடியாக சவுதிக்குள் நுழைய அனுமதி என்ற செய்தி போலியானது.

சவுதியில் நேரடியாக நுழைய அனைவருக்கும் அனுமதி என்று பரவும் ஸ்கிரீன் ஷாட் போலியானது. அத்தகைய முடிவு எதையும் இன்னும் சவுதி உள்துறை அமைச்சகம் எடுக்கவில்லை எனவே அந்த தவறான செய்தியை யாரும் நம்பவேண்டாம். 

வருகின்ற அக்டோபர்-1,2021 அன்று 11:00 மணிமுதல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தடுப்பூசி எடுத்துக்கொண்ட அனைவருக்கும் நாட்டில் நேரடியாக நுழைய அனுமதி என்ற வண்ணத்தில் பிரபல சவுதியின் தினசரி நாளிதழின் பெயரில் போலியான ஸ்கிரீன் ஷாட் பரவி வருகின்றன. 

தற்போதுள்ள விதிமுறைப்படி சவுதியில் இருந்து 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு தாயகம் சென்றவர்கள் நேரடியாகவும் மற்றும் இந்திய உள்ளிட்ட அவரவர் தாய்நாடுகளில் சவுதி அங்கீகாரம் வழங்கியுள்ள தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் சவுதி நேரடியாக பயணத்தடை விதிக்காத மற்றொரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து பிறகு மட்டுமே சவுதியில் நுழைய முடியும். இதில் எந்த மாற்றமும் இன்று செய்தி பதிவு செய்கின்ற இந்த நேரம் வரைவில் வரவில்லை. எனவே போலியான செய்தியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். வரும் நாட்களில் என்ன முடிவை சவுதி எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe