சவுதி அரேபியாவில் வைத்து தன்னுடைய மனைவி மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தையும் இறந்த நிலையில் நாடு திரும்பிய இந்திய இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள பெரும் துயரமான செய்தி தற்போது வெளியாகி வளைகுடா இந்தியர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (26) காலை கேரளா மாநிலம், ஆலுவா, செங்கமநாடு, கப்பரசேரி உள்ள அவருடைய வீட்டில் வைத்து விஷ்ணு (வயது-32) இந்த முடிவை எடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவின், கதிஃப் நகரில் கணக்காளரான விஷ்ணு தன்னுடைய மனைவி காதா (வயது-27) உடன் வசித்து வந்தார். ஆறு மாத கர்ப்பிணியாக இருந் மனைவியை நாட்டுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகளை செய்த நிலையில் அவர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டார் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் கதிஃபில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு கவலைக்கிடமாக நிலையில் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறிது நேரத்தில் காதா உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தையும் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தது.
இந்நிலையில் இருவரின் உடலையும் அங்கேயே அடக்கம் செய்துவிட்டு. விஷ்ணு நாட்டிற்கு வந்தார். அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்று அவருடைய பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் குடும்பத்தினர் யாரும் எதிர்பாராத நிலையில் அவர் இந்த தற்கொலை முடிவை தேடியுள்ளார்.
செய்தி மூலம் - https://www.arabtamildaily.com/