Ads Area

வெளிநாடு செல்ல தயாராகும் இலங்கையர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்க நடவடிக்கை.

 வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு இதை அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe