Ads Area

நயினாகாட்டிலிருந்து செங்கல் ஏற்றிவந்த ரிப்பர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் பாரியசேதம்.

( வி.ரி.சகாதேவராஜா)

நயினாகாட்டிலிருந்து செங்கல் ஏற்றிவந்த ரிப்பர் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் பாரியசேதம் ஏற்பட்டது.இச்சம்பவம் காரைதீவு பிரதானவீதியில் (11) சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

நயினாகாட்டிலிருந்து கல்முனை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கையில் காரைதீவு கந்தசுவாமி ஆலய முன்ளாலுள்ள பிரதான வீதியில் வைத்து திடிரென டயர் வெடித்து இவ்விபத்து சம்பவித்துள்ளது.

திடிரென டயர் வெடித்த காரணத்தினால் வேகமாகவந்த லாறி ஆலயத்திற்கு முன்னாலுள்ள வீட்டு மதிலில் மோதி தடம்புரண்டது. மதில் சுக்குநூறாக உடைந்தது. ஏற்றிவந்த செங்கல் அனைத்தும் வீதியில் சிதறியது.

எனினும் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. காரைதீவுப்பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe