Ads Area

ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் அமையும்.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமையும் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிப்பளை அம்பிளாந்துறை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்                      

கிராமத்தில் வாழும் மக்கள், தமது உற்பத்திப் பொருட்களை இலகுவில் நகர்ப்பகுதிகளுக்கு கொண்டுசென்று சந்தைப்படுத்தவும் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும் இந்தக் கிராமிய பாலங்கள் அமைக்கும் பணிகளை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பிரதமரின் தலைமையில், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


SURESHRAJARATHNAM

Journalist

0714551010/0776682998



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe