Ads Area

அறிவித்தல் - கல்முனை ஆதார வைத்தியசாலையில் என்புமூட்டு கிளினிக் ஆரம்பம்!

 (வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நேற்று (29) புதன்கிழமை தொடக்கம் பிரதி புதன்கிழமைகளில் என்புமூட்டு கிளினிக் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

கல்முனை ஆதாரவைத்தியசாலை வரலாற்றில் முதற்தடவையாக நிரந்தரமாக என்புமூட்டு சத்திரசிகிச்சை நிபுணரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எலும்பியல் அறுவைச்சிகிச்சை  நிபுணர் டாக்டர் சத்துரங்க விதான கமகே அண்மையில் இங்கு நியமிக்கப்பட்டதன்பிற்பாடு நேற்று (29) முதற்தடவையாக என்பமூட்டு கிளினிக் ஆரம்பமாகின்றது.

வைத்தியசாலையில்  பிரதி புதன்கிழமைகளில் நடைபெறவிருக்கும் இந்த கிளினிக்கில் குறித்த என்புப் பிரச்சினையுள்ள நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமென வைத்தியசாலை நிருவாகம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் ,என்பு நோய் சிகிச்சை பெறுவதற்காக பல நோயாளிகள் மட்டக்களப்பு அம்பாறை போன்ற பல பிரதேசங்களுக்கு காலநேரபணவிரயம் செய்து சென்றுவரவேண்டியதாயிருந்தது.

ஆனால் ,இன்று முதல் இவ் வசதி கல்முனையில் காலடியில் கிடைப்பது ஒரு வரப்பிரசாதமே என சுகாதாரத்துறை ஆர்வலர்கள் கருத்துரைக்கின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe