Ads Area

இன குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன - முஜிப் டளஸுக்கு கடிதம்.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது பலத்த அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரூபவாஹினி, ஐரீஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பியதையிட்டு ஊடக அமைச்சர் டளஸ் அழகப் பெருமவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே முஜிபுர் ரஹ்மான் தனது பலத்த அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் நடமாடும்  குண்டுதாரிகள்' எனக் குறிப்பிட்டு, ஞானசார தேரர் தெரிவித்திருக்கின்ற கருத்து சிங்கள மக்களிடையே  முஸ்லிம்களைப் பற்றிய தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த முடியும் என்று முஜிபுர் ரஹ்மான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஊடக கலாச்சாரத்தை மீறி அரச ஊடகங்களில் இவ்வாறு இன குரோதத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான், இதற்கு முன்பு ஒரு பேராசிரியருடைய நிகழ்ச்சியில் அப்பேராசிரியரை அவமதித்துப் பேசியதை   அமைச்சர் கண்டித்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe