சவுதி அரேபியாவின் நஜ்ரான் பகுதியில் உள்ள ஹோட்டல் அறையினை இலங்கைப் பணியாளர் ஒருவர் சுத்தம் செய்யும் போது அங்கு தங்கம் நிரப்பப்பட்ட பை ஒன்றைக் கண்டெடுத்து அதனை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து தனது நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார் இலங்கையைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர் ஒருவர்.
இலங்கைப் பணியாளரின் இந்த நேர்மையினை அந் நாட்டு சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய ஆணைக்குழு பாராட்டி கௌரவித்துள்ளது.
மேலும் அந்தப் பையின் உரிமையாளர் தகவலறிந்து ஹோட்டலுக்கு விரைந்து வந்து இலங்கை துப்பரவுப் பணியாளரின் நேர்மையினை அவரும் பாராட்டிச் சென்றுள்ளார்.
இலங்கை துப்பரவுத் தொழிலாளியின் இத்தகைய நேர்மையினைப் பாராட்டி சவுதி அதிகாரிகளால் அவருக்கு நற்சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நேர்மையான மக்களின் நேர்மையினை ஊக்குவிக்க முன் வந்தால் மக்கள் இத்தகைய நேர்மையான செயல்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என குறித்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நன்றி - http://www.thamilan.lk/