நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அன்றாட நடவடிக்கைகள் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.