(ஏ.எச்.எம்.ஹாரீஸ் & எஸ்.அஷ்ரப்கான்)
சிட்னி பிரதர்ஸ் அமைப்பினால் 1,500 ரூபாய் பெறுமதியான உலருணவுப்பொதிகள் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களுக்கு இன்று (08) வழங்கி வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் வழங்கிய நிதியுதவியினைக் கொண்டு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
1,500 ரூபாய் பெறுமதியான 350 பொதிகள் தயாரிக்கப்பட்டு 350 குடும்பங்களுக்கு நளீர் பௌன்டேசன் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
இவை மத்திய முகாம், சாளம்பைக்கேணி, வீரத்திடல், சவளக்கடை ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கே வழங்கப்பட்டன.
மேலும் இவ்வமைப்பினால் பல சமூக சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.