Ads Area

அறிவித்தல் - சாய்ந்தமருதில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கை மேலும் 02 தினங்களுக்கு நீடிப்பு..!

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

இரண்டாவது தடுப்பூசியைப் பெறாத மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட ஏனையோர்களுக்கான முதலாவது தடுப்பூசி நடவடிக்கைகள்  செவ்வாய்க்கிழமையும் நேற்று புதன்கிழமையும் நான்கு நிலையங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், பொது மக்களின் நலன் கருதி இத்தடுப்பூசியேற்றும் பணியை மேலும் 02 தினங்களுக்கு முன்னெடுக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அல்அமீன் றிஷாட் தெரிவிக்கின்றார்.

இதன் பிரகாரம் இன்று வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பின்வரும் நிலையங்களில் தடுப்பூசியேற்றும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

01) சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகம்- சாய்ந்தமருது.

02) பிரதேச வைத்தியசாலை- சாய்ந்தமருது.

03) கமு/ அல் ஹிலால் வித்தியாலயம்- சாய்ந்தமருது.

04) கமு/ அல் ஜலால் வித்தியாலயம்- சாய்ந்தமருது.

ஆகையினால், இரண்டாவது தடுப்பூசி பெற தகுதியானவர்களும் இதுவரை முதலாவது தடுப்பூசி பெறாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் இவ்வரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குரிய நிலையத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு 

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அல்அமீன் றிஷாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டாவது தடுப்பூசி பெற வருகின்றவர்கள் கட்டாயம் தடுப்பூசி அட்டையைக் கொண்டு வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe